சற்று முன் மகாராணி லண்டனில் இருந்து வின்சர் கோட்டைக்கு தப்பி ஓட்டம் : கொரோனா கலக்கம்!!
பிரித்தானிய மகாராணி சற்று முன்னர் தனது லண்டன் உத்தியோகபூர்வ வாசல் ஸ்தலத்தில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளதாக Vannimedia இணையம் அறிகிறது. நேற்று இரவு அவசரமாக இடம்பெற்ற கோபிரா மீட்டிங்கை அடுத்து பிரித்தானிய பிரதமர், மற்றும் ரகசிய சேவைப் பிரிவு ஆகியன மாகாராணியார் தங்கியுள்ள பங்கிங்ஹாம் மாளிகை லண்டனில் இருப்பதால். அது ஆபத்து என்று அறிவித்ததை அடுத்தே. அவரை வின்னர் காசில்(கோட்டைக்கு) மாற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
2ம் உலகப் போரின் போது அரச குடும்பத்தை மிக மிக பாதுகாப்பாக வைத்திருந்தது பிரித்தானியா. ஹிட்லர் பல தடவை அரச குடுபத்தை போட்டு தள்ள திட்டம் தீட்டி இருந்தார். தற்போது 2ம் உலகப் போர் போல, கொரோனா உருவெடுத்துள்ளது. மகாராணி தப்பிச் செல்லும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது. ஆனால் அனைவரும் கைகளை கழுவிக் கொண்டு கவனமாக இருக்கும்படி பிரித்தானிய பிரதமர் கூறி வருகிறார்.
இது இவ்வாறு இருக்க, சற்று முன் ராணுவத்தினருக்கு பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்கெட்டுகள், வைத்தியசாலைகளை ராணுவம் கொண்டு பாதுகாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

