கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!
முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்ற குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வெடிப்பு சத்தம் ஒன்று இடம் பெற்றதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந் இராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தினர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வீட்டினை சோதனை செய்த இராணுத்தினர் வெடி பொருட்களுடன் குறித்த நபரை கைது செய்தனர்.
கைதானவர், கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

