யாழ் பருத்தித்துறையில் வெள்ளமாக ஓடிய மண்ணெண்ணெய்!! (Video)
பருத்தித்துறை பஸ் நிலையப்பகுதிக்கு அண்மையில் மண்ணெண்ணைய் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் வெள்ளம்போல் மண்ணெண்ணெய் ஓடி பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதி மக்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்களில் குறித்த எண்ணெய்யை சேகரித்தச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவத்தையடுத்து பருத்தித்துறை நகரசபையினர் குறித்த இடத்திற்கு மண் இட்டு மூடியுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி 1000 லீற்றர் நீர் தாங்கி ஒன்றில் மண்ணெண்ணெய் நிரப்பி வாகனமொன்றில் கொண்டு சென்ற போது தாங்கியில் வெடிப்பு ஏற்பட்டதில் கொண்டு சென்ற மண்ணென்னை பருத்தித்தித்துறை பஸ் நிலையம் முன்பாக வீதியில் ஊற்றப்பட்டது. இதையடுத்து அங்கு நின்ற சிலர் ஊற்றப்பட்ட மண்ணென்யை போத்தல்களில் எடுத்து சென்றனர்.
இச்சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றது.





