யாழ் பொலிசாரால் குறட்டினால் குஞ்சுமணி நசுக்கப்பட்ட ரவுடி சுந்தரம் தப்பியோட்டம்!! (Photos)
யாழில் பல்வேறு குற்றங்கள் புரிந்து பயங்கர ரவுடியான அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது-46) என்பவன் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் பொலிசாரால் பிடிக்கப்பட்டான். இந் நிலையில் இவன் பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக இவனது கள்ளப் பெண்டாட்டி மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தாள்.
இவன் தனது மனைவியை விட்டுவிட்டு கிட்டு பூங்காவுக்கு அருகில் பலசரக்கு கடை வைத்திருந்த ஒருவரின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டு கையும் மெய்யுமாக கணவனால் பிடிக்கப்பட்ட போது கணவனை கடுமையாகத் தாக்கிய பின்னர் குறித்த குடும்பப் பெண்ணுடன் தப்பிஓடிய சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததாகும். அத்துடன் இவன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூலிக்கு தாக்குதல்செய்தல்இ கொள்ளை நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற கடும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தான்.
கள்ளப் பெண்டாட்டியின் முறைப்பாட்டையடுத்து மனித உரிமை ஆணை;ககுழுவும் சுந்தரத்தை பொலிஸ் நிலையத்தில் இருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றியிருந்தது. இந் நிலையிலேயே இவன் தப்பி ஓடியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.க காலத்தில் விஜயகலாவின் அடியாட்களால் இவன் பயன்படுத்தப்பட்டு வந்தான் எனவும் தற்போது இவனை அங்கஜன் குழு தனது தேவைகளுக்காக பாவித்து வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத் தன்மையை பொலிசார் கண்டறிய வேண்டும் எனவும் குறித்த பதிவுகள் தெரிவிக்கின்றன.


