பாடசாலைச் சொத்துக்களை அடித்து உடைத்த யாழ் இந்து மாணவ முதல்வர்கள் (Video)
யாழ் இந்துக்கல்லூரியை சேர்ந்த 2019ம் ஆண்டு உயர்தர பிரிவை சேர்ந்த மாணவ முதல்வர்கள்
பாடசாலையின் கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி அதை
காணாளிப்படுத்தி “TikTok” டிக்டொக் செயலியில் பதிவேற்றியுள்ள சம்பவம் யாழ் கல்விச்
சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டு மரங்களிற்கு கீழும் தறப்பாள் கொட்டகைக்குள்
பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க இவ்வாறான மாணவர்கள் தமக்கு இருக்கின்ற வசதிகளையே
தமது சிற்றின்பத்திற்காக அடித்து நொறுக்குவது தமிழர் தேசத்தின எதிர்காலத்திற்கு பெரும்
ஆபத்தான ஒரு விடயமாகும்.
பலமாவீரர்களை இந்த மண்ணுக்காக உகந்த ஒரு பாடசாலையில் இவ்வாறான சம்பவம்
நடந்தேறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இவ்வாறு சமூகம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ எந்தவித சிந்தனையுமற்ற ஒரு மாணவ
சமுதாயத்தை வளர்த்தெடுத்தது பெற்றோரின் தவறா அல்லது பாடசாலை சமூகத்தின் தவறா என்பதே
ஒரு பெரும் கேள்வியாகும்.
பேரினவாத அரசுகள் திட்டமிட்ட வகையில் எமது கல்வியை அழித்து வர நாமே நம் தலைமீதே
சேறள்ளிப்போடுவது போலானது இவ்வாறன செயற்பாடுகள்.சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவனால்
மட்டுமே ஒரு சிறந்த சமூகப்பிரஜை ஆகமுடியும்.
இதே வேளை யாழ் இந்துக் கல்லுாரி அதிபர் யாருடைய காலில் விழுந்தாவது தனது பதவியைக் காப்பாற்றுவதற்கான நடடிக்கையை எடுத்து வருகின்றாரே தவிர மாணவர்களின் கல்வியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளார் என தெரியவருகின்றது.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் யாழ் இந்து பழைய மாணவர். இன்னும் எத்தனையோ அதிகாரம் மிக்கவர்கள் யாழ் இந்துவின் பழைய மாணவர்களாக இருக்கிறார்கள். ஆனால் யாழ் இந்துக்கல்லுாரி மிகக் கேவலமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் யார் என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒருவரும் முன்வருகின்றார்கள் இல்லை. சில வேளை இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் முக்கிய பாடசாலைகளைக் குறி வைத்து அங்கு கற்கும் மாணவர்களின் கல்வியை திட்டமிட்ட வகையில் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதா என சந்தேகம் தோன்றுவதாக யாழ்ப்பாண கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.