கொரோனாவின் வீரியமும் பயங்கரமும் உணராத நம்நாட்டு மக்களே!
பணக்கார நாடுகளே தலையில கைவைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாளுக்குநாள் பீதியில் உறைந்துகொண்டிருக்கின்றன. இலங்கை போன்ற ஒரு நாட்டில் கொரோனா வந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப்பாருங்க.
இலங்கையில் வெப்பநிலை காரணமாக கொரோனா பரவாது என்பதும் வதந்தி. இங்கு கொரோனா பரவுவது அதிகரித்தால் நாடே நாசமாகிடும். மற்ற அனர்த்தங்களைப்போல அயல் நாடுகளெல்லாம் உதவிக்கு வருமென கனவிலும் நினைக்காதீர்கள். இலங்கையின் பொருளாதாரம் கொரோனாவின் கால் தூசிக்கு சமம். ஒரு கட்டத்தில் அனைவரும் கூண்டோடு கைலாசம்தான்.
இதுவரை இல்லாத ஒரு பயங்கர கொள்ளை நோயாக உருவெடுத்துவரும் இந்த கொரோனா பற்றி நீங்கள் பதிவிடும் எச்சரிக்கை உணர்வைச் சிதைக்கும் என்பதை மறவாதீங்க..

