புதினங்களின் சங்கமம்

சிங்கள குடும்பப் பெண்ணுடன் யாழ் மாணவன் கள்ளத்தொடர்பு!! கொலை வெறியில் கணவன்!!

கொழும்பு கெசல்வத்தைப் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரியான குடும்பப் பெண் ஒருவருடன் யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மொறட்டுவை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கள்ளத் தொடர்பு கொண்டு அவளுடன் தலைமறைவான நிலையில் குறித்த கோடீஸ்வரியின் கணவன் வடமராட்சிப் பகுதிக்கு வந்து தனது மனைவியை தேடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவியைக் காணாது கணவன் பொலிசாரிடம் முறையிட்ட போது மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மனைவியின் மடிக்கணனி என்பவற்றை பரிசோதித்த பொலிசார் குறித்த பெண்ணுக்கு இளைஞன் ஒருவனுடன் கள்ளத் தொடர்பு இருப்பதை அறிந்து கணவனுக்கு தெரிவித்துள்ளனர், அத்துடன் பெண்ணின் தொலைபேசி மற்றும் வட்சப் தொடர்புகளை வைத்து அந்த இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை ஆராய்ந்து யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர் என அறிந்துள்ளனர். இளைஞனின் தொலைபேசி பதிவுகளில் இருந்து அடையாள அட்டை முகவரிக்கு பொலிசார் வருவதற்கு முதலே கணவன் சில அடியாட்களுடன் அந்த விலாசத்துக்கு வந்து விசாரித்துள்ளான். குறித்த விலாசத்தின் அவனது அக்காவே வசித்து வந்துள்ளார். பல்கலைக்கழக படிப்பை முடித்து பட்டமளிப்பு நிகழ்வுக்காக காத்திருக்கும் குறித்த இளைஞன் சிங்கப்பூரில் உள்ளதாக அக்காவால் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இதே வேளை இளைஞனின் அக்காவின் வீ்ட்டுக்கு கணவன் சென்று திரும்பிய பின்னர் குறித்த குடும்பப் பெண் பொலிசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கூறி தான் வெளிநாடு ஒன்றில் இருப்பதாகவும் கணவனுடன் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்தடன் விரைவில் தான் இலங்கை வரவுள்ளதாகவும் கணவன் ரவுடி என்பதுடன் போதைப்பொருள் பழக்கம் உள்ளவர் எனவும் கணவர் தன்னை ஏதாவது செய்துவிடுவார் என்றும் அதற்கான பாதுகாப்பை தனக்கு தருமாறும் பொலிசாரைக் கேட்டுள்ளார். குறித்த பெண்ணின் தந்தை கோடீஸ்வர வர்த்தகர் எனவும் கொழும்பில் பாரிய வர்த்தக நிலையங்கள் உள்ளன எனவும் தெரியவருகின்றது.