புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கல்வி அமைச்சு பாடசாலைகளை மூடியது திட்டமிட்ட சதியாம்!! ஆசிரியர்களின் குமுறல் இதோ!!

பாடசாலைகளை ஒரு மாத காலத்திற்கும் மேலாக மூட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று ஆசிரியர்கள் பலர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில் கொரோனா தொற்று ஒருவருக்கு மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் பயிலும் அவருடைய மகனுக்கு கூட குறித்த நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை ஒரு மாதத்துக்கும் மேலாக நீண்ட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பாடசாலைகளை எதிர்வரும் 26ஆம் திகதியுடன் திறப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஏற்படலாம் என்று கருதப்படும் பாரிய அரசியல் மாற்றத்தினை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு உத்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிபர் ஆசியர்கள் இணைந்து எதிர்வரும் 15.16,17ஆம் திகதிகளில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.