பிரித்தானியாவில் மற்றொரு யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண் கொரோனாவுக்கு பலி!(Photos)
யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவர் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
அகஸ்ரின் தங்கராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவில் குடும்பத்தாருடன் வசித்துவந்த அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இலங்கையர்கள் 25 பேர் உயிரிழந்ததாக உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

