பருத்தித்துறையில், வீதியை விட்டு பாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்!! (Photos)
சற்று முன்னர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மந்திகை சந்திக்கு அண்மையில் இலகு ரக வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை நோக்கி பயணித்த இலகு ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் மோதி இழுத்த வண்ணம் வீதியை விட்டு பாய்ந்தது.
குறித்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணம் செய்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
மற்றும் வாகனத்தில் பயணம் செய்த இருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்தானது இலகு ரக வாகன சாரதி மது போதையில் இருந்தமையும் அதிக வேகமுமே காரணமென ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது.
மது போதையில் வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி எம் மக்களுக்கு தெளிவு படுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அலட்சியமாக இருப்பதே இது போன்ற விபத்துகளுக்கு வித்திடுகின்றன.