பட்டதாரிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி சூறையடித்த 28 அரசியல் கட்சிகளின் கடிதங்கள்

மக்கும் எந்த அரசியல் கட்சிற்குமோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இல்லை. இதனை எதிராக கடிதம் வழங்கிய அனைத்து கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் கஸ்டப்பட்டு எமது பட்டப் படிப்பை முடித்து கொள்ள முடிந்தது என்று உங்களுக்கு தெரியுமா?😰

உங்களுக்கு என்ன 5 வருடத்திற்கு ஒருமுறை கோமாவில் இருந்திட்டு வெளியில் வருவீங்க வந்து மக்களிடம் பல்லக்காட்டி காசையும் குடுத்து கள்ள வோட்டப் போட்டு அடிச்சி புடிச்சி mp வாற போல என்று நினைத்தீர்களா எங்களது பட்டப்படிப்பை…??🤭

கடந்த காலங்களில் உங்களது அரசாங்கம் அதாவது unp யும் அதோடு சேர்ந்த கூட்டுக் கட்சிகளும் வழங்கிய நியமனங்களை நிறுத்தியமைத்தற்காகவா எமது பட்டதாரிகளிற்கு வழங்கிய நியமனங்களை நிறுத்துவதற்காக
28 கடிதங்களை வழங்கினீர்கள்??
இது ஓர் அரசியல் பழிவாங்கலேயாகும்.😰

அறிவுகெட்ட தனமாக பட்டதாரிகளிற்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்காமல் விட்டீர்கள். அந்த வேளையில் அந்த முடிவை எடுக்கும் போது தற்போது வேட்பாளர்களாக காணப்படுவர்கள் எங்கே போனீர்கள் கோமாவில் இருந்த போல.
இவர்கள் தற்போது நித்திரையில் இருந்து எழும்பி என்ன கூறுகிறார்கள் என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பதவி எடுத்து 3 மாத காலத்தில் பட்டதாரிகளிற்கு நிரந்தர நியமனம் தரப்போறாங்களாம். போயா போய் வேற வேலைய பாரு.

ஆரம்பத்தில் தேர்தல் ஆணைக்குழு அழகாக சொன்னது பட்டதாரி நியமனத்திற்கும் தேர்தலிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று. ஆனால் கடிதம் கிடைத்த சந்தோஷத்துடன் வேலைக்கு போக போனால் வச்சானுகள் பாரு ஆப்பு. எல்லாத்தையும் செய்து விட்டு தற்போது நாங்கள் எதுவும் செய்யவில்லை நாங்கள் பட்டதாரிகளிற்கு வேலை வழங்கத்தான் சொல்லுறம் என்று இன்றைக்கு அடிச்சி விட்டிக்காங்கள்.. #முக்கிய_பகுதி

ஏயா… நீங்கள் தான் எங்களை ஒதுக்கீனீர்கள் வேணாம் எங்களிற்கு A/L படித்தவர்கள் தான் வேணும் பட்டம் முடித்தவர்கள் வேண்டாம் என்று. ஏன் என்றால் நாங்கள் O/L முடித்தவுடன் நேரடியாக பல்கலைக்கழகம் போனோம் நாங்கள் A/L படிக்கயில்ல தானே.. ?
என்ன கொடுமை பாருங்கள்.

தற்போது வந்திருக்கிற அரசாங்கம் எங்களையும் ஒரு மனிதனா மதித்து நியமனம் வழங்கியது அதனையும் பழிவாங்கிவிட்டீர்களே. கடைசி ஒரு அரசியல் வாதியல்லாமல் சராசரி மனிதனாக கூட யோசிக்க இல்லையே..

உங்களுடைய ஆட்சி காலத்திலும் எங்களிற்குரிய அங்கீகாரம் தரவில்லை. தற்போது உள்ள அரசாங்கம் தந்த அங்கீகாரத்தையும் பறித்துள்ளீர்கள்… அவ்வாறாயின்

#நாங்கள்_எதுக்கு_உங்களுக்கோ_உங்களை_ஆதரிக்கும்_கட்சிகளிற்கோ_வாக்களிக்க_வேண்டும்????

எங்கள் தெரிவு எப்போதும் எங்களிற்கு ஒரு கைபிடி சோறு போடும் கட்சிக்கு தான்.

தற்போது நாங்கள் கெளரவ ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3/2 பெரும்பான்மை எடுக்க வைக்க இல்லை என்றால் எங்களது வாழ்க்கையை அன்றைய தினம் முடித்து கொள்வதே சிறந்தது.

பட்டதாரிகளே..
பல்கலைக்கழக மாணவர்களே..
இளம் சமூகமே..
எங்களைப் பெற்ற பெற்றோர்களே..

விழிப்படைந்து கொள்ளுங்கள். வாக்களிக்கும் போது சற்று எங்களது வாழ்க்கையை பற்றி சிந்தியுங்கள்.. உங்கள் கைவிரல்களே தேர்தல் தினத்தில் புள்ளடியிடும் போது பதில் சொல்லும்…

…பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும் கட்சியை நம்பாதீர்கள்…

இது தனிப்பட்ட பட்டதாரியின் மனக்குமுறல் அல்ல ஒட்டுமொத்த பட்டதாரிகளின் இன்றைய அவல நிலை..

நன்றி – வேலையற்ற பட்டதாரி ஒருவரின் முகப்புத்தகத்தில் இருந்து

error

Enjoy this blog? Please spread the word :)