Vampan memesபுதினங்களின் சங்கமம்

அங்கஜன் எம்பி அதற்குள் வைத்து அரைக்கின்றாராம்!! வடக்கு ஆளுநர் அறிக்கையாம்!! புளொட் இணையத்தளம் தகவல்!!

எங்கு என்ன விடயம் நடந்தாலும்… யாரு எந்த பதிவை இட்டாலும் எந்த இணையத்தளம் யாருடை தயவில் எவ்வாறு செய்தி வெளியிடுகின்றது என்பவற்றை எல்லாம் அப்படியே இந்த வம்பன் உங்களுக்கு தருவான்…ஆகவே http://vampan.net உடன் இணைந்திருங்கள்..

இது தேர்தல் காலம்….அனைத்து அரசியல்வாதிகளும் மக்களின் தலையில் எப்படியாவது மிளகாய் அரைத்து நாடாளுமன்றுக்குள் நுழையவே விரும்புவார்கள். இவ்வாறான நிலையில் அங்கஜன் எம்பி சில திருவிளையாடல்கள் செய்துள்ளதாகவும் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வடக்கு மாகாண ஆளுநர் தரப்பு அறிக்கை விடுத்துள்ளதாகவும் புளொட் அமைப்பு சார்பாக இயங்கும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் வீதிகளை புனரமைப்பது தொடர்பில் தமது அரசியல் நலனுக்காக சிலர் மக்களுக்கு தவறான கருத்துக்களை கூறிவருவதாக வடமாகாண ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுனர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஆளுனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கடந்த தை மாதம் இருபத்து மூன்றாம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்
உள்ளூராட்சி அமைச்சும் அதன்கீழான திணைக்களங்களுக்குமான துறைசார் கூட்டம் கௌரவ வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோது.

உள்ளூராட்சி மன்றங்களின் கீழே பெரும்பாலான வீதிகள் திருத்தப்படாத நிலை தொடர்பில் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் ஆராய்ந்தார் .

அவ்வேளை உள்ளூராட்சி மன்றங்களின் கீழே திருத்தப்படாத வீதிகளை திருத்துவதற்கான நிதியேற்படுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு திட்டவரைபு மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகளை விரைவில் தனக்கு சமர்ப்பிக்குமாறு ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைச்சின் வரவுசெலவு திட்ட முன்வரைப்பிற்கு அனுப்பி வரவுசெலவு திட்டத்தின் மூலமாக நிதி ஏற்படுகளை பெற்றுக்கொள்ளும் விதத்திலே குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கோரப்பட்டன.

இந்நிலையில் குறித்த வீதி புனரமைப்பு தொடர்பாக அரசியல் நோக்கத்திற்காக சிலரால் மக்களிடம் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது .

குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் கீழே திருத்தப்படாதிருக்கும் வீதிகளை புனரமைப்பதற்கான நிதியினை தேர்தலுக்கு பின்னரான வரவுசெலவு திட்டத்தின் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் செயலகம் மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கின் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீதி அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி மேற்கொள்வதாக, இல்லாத விடயங்களை குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுவதாக தமிழ்பக்கம் சில நாட்களின் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தது. இந்த விடயத்தில் ஆளுனரும் தற்போது கவனம் செலுத்தியுள்ளார்.