புதினங்களின் சங்கமம்

முடங்குகிறது இலங்கை வங்கி! வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில் பொதுமுகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும், எதிர்வரும் ஆறாம் திகதி அதாவது நாளை வெள்ளிக்கிழமை(06.03.2020) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் இலங்கை வங்கியின் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும்,இலங்கை வங்கி ஊழியர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .

No photo description available.No photo description available.