ஆறு மாதங்களுக்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு தடையா? வெளியிடப்பட்டுள்ள தகவல்!
மது மற்றும் சிகரெட் புகைப்பவர்களுக்கு தடுப்பூசி போடுவது பணம் மற்றும் வளங்களை வீணாக்குவதற்கு சமமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் மது தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவர் (NATA) டாக்டர் சமதி ராஜபக்ஷ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
புகைபிடித்தல் சுவாச மண்டலத்தை சேதப்படுத்துகிறது. மற்றும் SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் கோவிட் -19 போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
அதன்படி, சிகரெட் புகைப்பவர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது, மேலும் அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் அபாயம் அதிகம் என்றும் அவர் கூறினார்.
மேலும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது, என்றார்.
அத்தகைய நபர்களுக்கு தடுப்பூசி போடுவது நாட்டில் கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்கும் இலக்கை அடைவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மது அல்லது சிகரெட் புகைக்காதவர்களுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் வலியுறுத்தினார்.
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பெற்றவுடன் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒருவர் புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ள நிலையில், அதற்காக ஆறு மாதங்களுக்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை தடை விதிக்க போகிறீர்களா அல்லது புகையிலை, மதுபான பாவனையாளர்களை அப்படியே கைவிடப்போகிறீர்களா என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் எழுந்துவருகின்றன.

