பட்டதாரிகள் நியமனம் ரத்தாகிவிட்டதா?? இல்லை!! இதோ முழுமையான விளக்கம்!!
சோர்ந்து போயுள்ள பட்டதாரிகளுக்கு பகிர்ந்து விடவும்…
தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்
அரசியல் ரீதியான நியமனங்கள் இனிமேல் இடம்பெறுவதை அனுமதிக்கபோவதில்லை என்றும் பொருட்களை இலவசமாக வழங்குவது போன்ற செயற்பாடுகள் இத் தேர்தல் காலத்தில் செய்ய முடியாது என்று தான் கூறியிருக்கிறார்.
அத்துடன் பயிற்சிகளை 2 மாதம் தாமதி
த்து வழங்கவும் என அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றாரே தவிர நியமனம் ரத்தாகும் என்று தெரிவிக்கவில்லை.
அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மற்ற இருவருடனும் கலந்தாலோசித்தே இறுதி முடிவுக்கு வருவேன் என்றும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் இனி இக்காலத்தில் 1000 ஆல் கூட்டி வழங்கலாமா என்ற கேள்விக்கே அவ்வாறும் பதிலளித்திருக்கின்றார்.
ஆனால் சிலர் இதனை அரசியலாக்கி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்து ஏக்கத்துடன் காத்திருக்கும் பட்டதாரிகள் மனதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
பயிற்சி வழங்கப்படுவதை விட நியமனம் வழங்கப்படுவதே முக்கியமாகும்.நியமனத்திற்கு எந்தப்பாதிப்பும் வராது.சில வேளைகளில் பயிற் சி என்பதே இரு மாதங்களின் பின்னர் தேர்தலுக்கு பின்னர் வழங்கப்படலாம்.எனவே எவரும் இது தொடர்பில் தேவையற்ற குழப்பம் அடையத்தேவையில்லை.
?நியமனக்கடிதத்தில் அமைச்சரவையின் தீர்மானத்திகதி 13.02.2020 ஆக காணப்படுவதுடன் மார்ச் 2 நள்ளிரவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அதன் பிறகே தேர்தல் காலம் தொடங்குகின்றது.
அத்துடன் தேர்தல் திணைக்களத்திற்கு தேர்தல் காலங்களிலும் இடம்பெறக்கூடிய நியனங்கள்,வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பெரும்பாலும் அனைவருக்கும் நியமனக்கடிதம் கிடைக்கும்.வட மாகாணத்தில் இது வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 230 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும் மாத்திரமே இதுவரை நியமனக்கடிதங்கள் கிடைக்கப்பெற்று தாம் நியமனத்தை ஏற்பதை உறுதி செய்து கொண்டுள்ளார்கள்.பல மாவட்டங்களில் எவரும் நேற்றுவரை கடிதங்களை பெறாமலுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
எனவே தகுதி வாய்ந்த 45 585 பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதம் இன்று முதல் ஒரிரு நாட்களுக்குள் முழுமையாக கிடைக்கப்பெறும்.எனவே இன்னம் வரவில்லை என கவலைப்படாமல் தேவையற்ற செய்திகளை மற்றவர்களுக்கும் பரப்பி அனைவரையும் குழப்பமடைய செய்ய வேண்டாம்.
இனி இந் நியமனத்துக்கு பிரச்சினை வராது.வாய்ப்புகள் மிக மிக குறைவு என தெரியவருகின்றது.
இதே வேளை
நியமனம் பெறும் பட்டதாரிகள் ஒரு வருடகால பயிற்சிக்குட்படுத்தப்படுவதுடன், முதல் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்த தேர்தல் ஆணைக்குழு பணித்துள்ளதாக தகவல்கள் வந்த நிலையில்
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 45 ஆயிரத்து 585 பேருக்கான நியமனக் கடிதங்கள் செயலாளர் / அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கையிடுவதுடன், பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேவை நிலையம் அல்லது நகர கஷ்டப் பிரதேச நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
நியமனம் பெறும் பட்டதாரிகள் ஒரு வருடகால பயிற்சிக்குட்படுத்தப்படுவதுடன், முதல் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.
இரண்டாம் குழுவினர் குறித்த சேவை நிலையத்தில் தமது கடமை தொடர்பாகவும் சேவை நிலையம் தொடர்பாகவும் இரண்டு மாதகாலம் ஆய்வு செய்து அந்நிலையத்தை முன்னேற்றுவதற்கான செயற்திட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும்.
முதல் குழுவின் தலைமைத்துவப் பயிற்சி நிறைவடைந்த பின்னர் அவர்கள் தமது சேவை நிலையத்திற்கு இணைக்கப்படுவதுடன், இரண்டு மாதகாலம் சேவை நிலையம் மற்றும் வழங்கப்பட்ட கடமைகள் தொடர்பாக ஆய்வு செய்து செயற்திட்ட அறிக்கையொன்றை தயாரிக்க வேண்டும்.
செயற்திட்ட அறிக்கையை நிறைவு செய்த இரண்டாம் குழுவினர் இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சியினை பெறுவதோடு, இவ் இரண்டு குழுக்களும் பின்னர் குறித்த சேவையில் தொழில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர்.
2021 மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் அனைத்து பயிலுநர்களுக்கும் குறித்த சேவை நிலையத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
நியமனம் பெறும் அனைத்து பட்டதாரி பயிலுநர்களும் தமது சேவை நிலையத்திற்கு அருகில் உள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி அல்லது கிராமிய அபிவிருத்தி வங்கி கிளையொன்றில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டியதுடன், அதுபற்றிய விவரத்தை பிரதேச செயலாளருக்கு வழங்க வேண்டும்.
அதனடிப்படையில் பயிற்சி காலத்தில் மாதாந்தம் ரூபா 20,000 கொடுப்பனவு அக்கணக்கில் வரவு வைக்கப்படும். பயிற்சி காலத்தின் முதல் இரண்டு மாதத்திற்குள் தயாரிக்கப்படும் செயற்திட்ட அறிக்கைக்கேற்ப கிராமிய மற்றும் குறைந்த வசதியுடைய குறித்த சேவை நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முன்வைக்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக 2020 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதனால், அனைத்து பயலுநர்களும் சேவை நிலையத்தில் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அண்மித்த பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தமது சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் – என்றுள்ளது.

