புலம்பெயர் தமிழர்

அவுஸ்ரேலியாவில் கோடிக்கணக்கான டொலர் மோசடி!! யாழ் சுரேந்திரனை தேடுகின்றது பொலிஸ்!!

ல கோடி டொலர்களை மோசடி செய்த சுரேந்திரகுமார் துரைரட்ணம் ( வயது 46) என்ற தமிழரை கைது செய்வதற்காக அவுஸ்ரேலிய பொலிஸாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சூடானிலிருந்து அகதியாக அவுஸ்ரேலியாவுக்கு வந்த 100 இற்கு மேற்பட்டவர்களை சுரேந்திரகுமார் துரைரட்ணம் என்ற இந்த நபர் ஏமாற்றியுள்ளார். இந்த அகதிகளுக்கு வீடு வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் பல கோடி டொலர்களை ஏமாற்றி வாங்கிவிட்டு தலைமறிவாகியுள்ளார்.

அவர் வீடு வாங்குவதாக கூறி வங்கியில் சமர்ப்பித்த ஆவணங்களும் போலியானவை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே அச்சுவேலி, வளலாய், கதிரிபாய் என்ற முகவரியைச் சேர்ந்த சுரேந்திரகுமார் துரைரட்ணம் என்ற இந்த நபரை அவுஸ்ரேலிய பொலிஸாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் தேடி வருகின்றனர்.

இந்த இலங்கையர் சட்டவிரோதமான அடகு பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருந்துள்ளார். அத்துடன், சுரேந்திரகுமார் துரைரட்ணம் என்ற இந்த நபர் கொழும்பில் பல தொடர்மாடி கட்டிடங்களையும் நிர்மாணித்துள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்ரேலியாவில் இவரிடம் பல கோடி டொலர்களை பறிகொடுத்தவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.