புதினங்களின் சங்கமம்

கோட்டபாயாவின் பங்காளிகளான டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையில் அடிபிடி தொடங்கியது!!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தன்னிச்சையாகச் செயற்படுகிறார் எனக்கூறி, அவரது செயற்பாட்டைக் கண்டித்து சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

மக்களின் முதன்மைத் தெரிவுகளை புறக்கணித்து – தன்னிச்சையான தெரிவுகளை மக்களுக்குத் திணிக்க முற்படும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரது செயற்பாட்டை கண்டிக்கிறோம். அவ்வாறு திணிக்கப்பட்ட முன்மொழிவுகளை எதிர்க்கிறோம். எனத் தெரிவித்தே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை இன்று புறக்கணித்து – வெளிநடப்புச் செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பதவியைப் பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனும், அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள ஈழமக்கள் ஜனநாயக்கட்டியும் கோட்டபய ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளித் தரப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.