ஆண்களே இறுக்கமான ஆடையுடன் உறங்கினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்!

நல்ல உறக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அப்படி உறங்குகையில் நாம் சில விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்தகைய நிம்மதியான உறக்கத்திற்கு ஆண்களும் சரி, பெண்களும் சரி இறுக்கமான ஆடைகள் அணிந்தால் பல விளைவுகள் ஏற்படுத்துமாம். அது என்ன என்று பார்க்கலாம்.

ஆண்களுக்கு

காலை முதல் இரவு வரை அலுவலக பணிகளில் மிகவும் இறுக்கமான உள்ளாடை அணிந்திருப்பது அதிக உஷ்ணம் ஏற்படுத்தும். அப்படி உடல் சூடு அதிகரிக்கும் போது, ஆண் இனப்பெருக்க மண்டலம் தொடர்புடைய டெஸ்ட்ரோஸ்டோன், விந்து உற்பத்தியை குறைத்து விடுகிறது. இதனால், கரு உருவாகுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.

இவ்வாறு இல்லாமல் இரவு உறங்கும் போது லேசான ஆடைகளை உடுத்தி நல்ல காற்றோட்டமாக இருந்தால் உடல் சூடு குறைந்து விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது என 500 ஆண்களை கொண்டு நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு

பெண்களுக்கு இரவில் உள்ளாடையை இறுக்கமாக பயன்படுத்தும் போது, உடல் வெப்பம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், மிக எளிதில் நோய் தொற்றுதல் அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். எனவே லேசான ஆடையை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

error

Enjoy this blog? Please spread the word :)