Home புதினங்களின் சங்கமம் மாமியாரை கொன்ற நபருக்கு மறியல்!

மாமியாரை கொன்ற நபருக்கு மறியல்!

மாமியாரை பொல்லால் தாக்கி கொலைசெய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, களுத்துறை நீதிமன்ற பிரதான நீதிவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டுள்ளார்.

மனைவியின் தாயான களுத்துறை, கட்டுக்குருந்தை, சென் செபாஸ்டியன் வீதியில் வசித்துவந்த, 53 வயதான செல்லய்யா வள்ளியம்மா என்ற பெண்ணை, குறித்த நபர், பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதன்பின்னர் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நேற்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.