கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு சக்கர உழவியந்திர (லான்ட் மாஸ்டர்) சாரதி காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி நோக்கிய திசையில் பயணித்து கொண்டிருந்த எரிபொருள் தாங்கி கொண்ட கனரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதே திசையில் பயணித்த இரு சக்கர உழவியந்திரத்தை (லான்ட் மாஸ்டரை) பின் பக்கத்தால் மோதி தள்ளியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் இரு சக்கர உழவியந்திர சாரதியே படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்ீ








