பல்சுவை செய்திகள்

அவர்கள் பேசிக்கொண்டே அந்தரங்க இடங்களில் தொடும்போதெல்லாம்

தவறாமல் படியுங்கள்…! அவன் தனது வேலைப்பளுவின் காரணமாக இரவு 12 மணி அளவிலே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்,அந்த சாலையில் வளைவுகளில் திரும்பிச்செல்லும்போது சற்றே அதிர்ச்சி அவனுக்கு ..!

காரணம் ஒரு பெண்ணின் உருவம் தலையில் துப்பட்டாவை மறைத்திருந்து ,கண்கள் மட்டும் வெளியில் தெரிந்தது ..இவனுக்கு அதிர்ச்சி நீங்கவில்லை இந்த நேரத்தில் வயதுப்பெண் ஒருவள் எப்படி தனியாக நிற்க முடியும் …பேயாக இருக்குமோ?இல்லை பெண் தான்! இருசக்கர வாகனத்தை மெதுவாக அவளருகிலே கொண்டுசெல்ல ,அவள் சற்று விரைவாக நடக்க ஆரம்பித்தாள் …ஹலோ யாருங்க நீங்க இந்த நேரத்துல பதில் இல்லை ..சட்டென வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி சென்று அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்…அவள் முக துப்பட்டாவை சட்டென விலக்கியவனுக்கு பேரதிர்ச்சி…!மேகலா நீ எப்படி இங்க ..பதிலேதுமில்லை..

 

இவன் மீண்டும் மிடுக்காய் கேட்க .பேச ஆரம்பித்தாள்..நான் கல்லூரி யை முடித்ததும் மேற்படிப்பை தொடங்கினேன் திடிரென அப்பா இறந்ததால் படிப்பு பாதியில் நின்றது அண்ணன்,வேலைக்குச்செல்லாத காரணத்தால் குடும்பம் உணவுக்கும் இதர தேவைகளுக்கும் சிரமப்பட்டது,என் அண்ணனோ தனக்குப் பின் உள்ள மூன்று தங்கைகளின் நிலையை உணரவில்லை ஊதாரியானான் ,என் தங்கைகளும் படிப்பை நிறுத்தும் கட்டாயத்தில் இருந்தனர் ,என் மனம் பொறுக்கவில்லை எனவே நான் வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன் பல இடங்களில் வேலைக்கு அனுகிணேன் அவர்கள் என் அறிவை விட அழகையே ரசித்தனர் அவர்கள் வேண்டாமென்று நல்ல இடத்தில் வேலை கிடைக்காதா என்று ஏங்கினேன்.

இறுதியாக ஒரு அலுவலகத்தில் வேலை கிடைத்தது ..முதலாளி நல்லவராக இருந்தாலும் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் ரீதியிலான வார்த்தைகளால் துளைத்தனர் ..எனக்கு குறைவான சம்பளமே அங்கு கிடைத்தது ..எனது சீனியர்கள் என்னை பணி ரீதியாக அதிக வேலைப்பளுவைக் கொடுத்தனர் ..தனக்கு கட்டுப்பட்டால் வேலைப்பளு இருக்காது எனவும் அதிகமாக பணம் கிடைக்கும் எனவும் கூறினர் ..இந்த வேலைகளை விட்டால் என் குடும்பத்தின் நிலை !நினைப்பேன் அவர்கள் பேசிக்கொண்டே தகாத இடங்களில் தொடும்போதெல்லாம் பொறுத்துக்கொள்வேன் நாளடைவில் முழுமையாக என்னை இழந்தேன் இப்போது பழகிவிட்டது..என்றாள் !,இவன் ஒரு நிமிடம் பழையதை நினைத்தான் தன் கல்லூரிக்காலங்களில் யாருமே சீண்ட முடியாத நெருப்பானவள்,நிரைகுடம் தழும்பாத அழகுப்பதுமை,என் கண்களுக்கு சொர்க்கம் போன்றவள்,என் காதலை ஏற்றுக்கொள்ளாமல் தன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவள் , சட்டென யோசனையை நிறுத்திவிட்டு ,அவள் முகத்தை பார்த்து என்னுடன் வர எவ்வளவு வேண்டும் என்றான்..?அவள் அவன் முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள் அவள் கண்கள் அருவிபோல் கொட்டியது .. மீண்டும் இவன் மிடுக்காய் சொன்னான் ஆம் என் மனைவியாக என்றான் !அவள் இல்லை!,எனக்கு தகுதியில்லை என்று கதறினாள் ,தான் கழிவுநீர்க்கால்வாய் போன்றவள் நீ தூய்மையான நீரோடை போன்றவன் என்றாள் ..இவன் மெதுவாக இந்த நீரோடை உன்னை சுத்தம் செய்யும் என்று அவளை அணைத்துக்கொண்டான் ..அவள் மனதார அந்த நீரோடையிடம் சரணடைந்தாள் ..!