Vampan memes

பஸ் சாரதிகளால் கொல்லப்பட்ட மட்டக்களப்பு சிலம்பரசன்!! அதிர்ச்சித் தகவலகள்!!

உன்னிச்சை. மாவிலங்கயடிச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தியாகராஜா சிலம்பரசன் (24) , என்ற இளைஞன்
தனது மூத்த சகோதரன் மதிவண்ணண் திருமணம் முடித்திருக்கும் நாவற்குடா வீட்டிற்கு சென்றுவருவதாக தாயிடம் சொல்லிவிட்டு
01/04/2019 காலை 07.00 மணிக்கு தனது ஊரிலிருந்து வெளியாகும் CTB பஸ்ஸில் மட்டக்களப்பு சென்றுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி அல்லது கல்முனை நோக்கி செல்லும் பஸ்ஸில் பயணித்துத்தான் நாவற்குடாவிற்கு செல்லவேண்டும்.

காலை 10.00 மணியாகியும் தம்பி சிலம்பரசன் நாவற்குடா வராததால் அம்மாவோடு தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல, தாயும் “இல்லியே மகன் அவன் 07.00 மணிக்கெல்லாம் வந்திட்டானே “என்றதும்
மூத்த சகோதரன் மதிவண்ணண்
தம்பியை தேடும் முயற்சியில் துவிச்சக்கர வண்டியில் மாவிலங்கையடிச்சேனை பஸ் நிலையம் தொடக்கம் மட்டக்கப்பு பஸ் நிலையம் வரை தேடி அலைந்துள்ளார்.

சமயோசிதமாக யோசித்த இவர்களது தாயார்
குறித்த பஸ்ஸில் வழமையாக ஆரையம்பதி ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பக்கத்துவீட்டு பெண் பிள்ளைக்கு தொடர்பை ஏற்டுத்திக் கேட்ட போது,

” நான் பயணித்த கல்முனைக்கு செல்லும் CTB பஸ்ஸில் உங்க மகன் முன்பக்கமாக நிற்பதை கண்டேன் என்றும், மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாகவுள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்து பயணி ஒருவர் தவறி விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள், அவர் யாரென்று எனக்கு சன நெரிசலுக்குள் கண்டு கொள்ளமுடியவில்லை என்றும் “தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட தாய் உடனடியாக மகன் மதிவண்ணணுக்கு தகவலை சொல்ல

அவர் காத்தான்குடி. ஆரையம்பதி வைத்தியசாலைகளில் தேடிவிட்டு மாலை 03.30 மணியளவில் மட்டக்ககப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது அவசர சிகிச்சை பிரிவில் மண்டையோடு உடைந்து இரத்தம் வெளியேறிய நிலையில் தனது தம்பி சிலம்பரசன் மயக்க நிலையில் சிகிச்சை பெறுவதை அடையாளம் கண்டுள்ளார்.

அவ்வாறு சிகிச்சை பெற்றுவந்த சிலம்பரசன் 02/04/2019 மாலை மரணித்துள்ளார்.

நாவற்குடாவில் இறங்க வேண்டிய சிலம்பரசன். ஏன்? மஞ்சந்தொடுவாயில் இறங்க வேண்டும்??

நாவற்குடாவில் இறங்குவதற்காக மணியடித்தும், போட்டி வியாபார நோக்கில் வேமாக பஸ்ஸை செலுத்தி மஞ்சந்தொடுவியில் சாரதி நிறுத்த முயற்சிக்கும் போதுதான் தவறி விழுந்து இப் பரிதாபமான மரணத்தை தழுவியிருக்கலாம்,

பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.