புலம்பெயர் தமிழர்

கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஜோதிலக்மியின் மரணத்தின் பின்னணி!

கனடாவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோதி லக்‌ஷ்மி பிள்ளை (27), கனடாவின் அழகைக் காண்பதற்காக சுற்றுலா சென்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் 9 அன்று கியூபெக்கின் Mont-joli பகுதிக்கு அருகில் உள்ள கடற்கரை ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பிரிஸ்டலில் பிறந்த ஜோதியின் பெற்றோர் ஃபிஜியைச் சேர்ந்தவர்கள்.

யாரோ இருவர் அவருக்கு லிஃப்ட் கொடுத்ததும் அவரை கடற்கரையில் இறக்கி விட்டதும் தெரியவந்தது. பின்னர் அவரது உயிரற்ற சடலம்தான் கிடைத்தது, அவரது பொருட்கள் அனைத்தும் அவரது அருகிலேயே கிடந்தன. சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவிக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் உடற்கூறு பரிசோதனையில், மரணத்திற்குமுன் ஜோதி போதைப்பொருட்களோ, மதுபானமோ அருந்தவில்லை என்பது தெரியவந்தது. நேற்று பிரிஸ்டலில் நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் ஜோதி தண்ணீரில் மூழ்கியதால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.