புதினங்களின் சங்கமம்

யாழில் கணவன் குடிகாரன்!! 6 பிள்ளை பெற்ற மனைவி!! காப்பாற்ற சொல்லி பொலிசில் தஞ்சம்!!

மதுபோதையில் கணவன் தினமும் மேற்கொள்ளும் கொலைவெறி தாக்குதலை தாங்க முடியாத 37 வயது குடும்பப் பெண்யொருவர், தனது ஆறு பிள்ளைகளுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

கொடிகாமத்தை அண்டிய பகுதியை சேர்ந்த இந்த பெண், தினமும் கணவனின் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார். நான்கு பெண் பிள்ளைகள் உட்பட jனது ஆறு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் புகுந்தார்.

தனது கணவன் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னையும் பிள்ளைகளையும் கண்மூடித்தனமாக தாக்குவதால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிசாரை கோரியுள்ளார்.

அவர்களது உடலில் தாக்குதல் காயங்களும் இருந்தன. இதையடுத்து பிள்ளைகளையும் தாயையும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பொலிசார் சேர்த்துள்ளனர்.