மட்டக்களப்பில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் ரயில் மோதி பலி!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புணானை பகுதியில் வைத்து மீனகயா புகையிரதத்தில் நேற்று (26) இரவு இளைஞர் ஒருவர் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணானை புகையிர நிலையத்திற்கு இடைப்பட்ட புகையிர கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாட்டு கேட்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணமான மீனகயா புகையிரதத்தில் நேற்று இரவு 9.10 மணி அளவில் மயிலந்தனை புணானையைச் சேர்ந்த ஜெய்கப்ஜோன் ஜோன்சன் (வயது 19) என்ற இளைஞனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

