புதினங்களின் சங்கமம்

சாராயத்தால் சீரழியும் மலையகத்தமிழர்கள்!! பவானியின் தற்கொலை கூறுவது என்ன??

மதுபாவனையால் தினம் எத்தனை தமிழ்பெண்கள் வாழ்க்கை சீரழிகின்றது!!!மலையகத்தில் உயிரிழந்த பவானி சகோதரி போன்று இனி எந்த பெண்கள் வாழ்க்கையையும் அழிக்க ஆண் உறவுகளே துணை புரியாதிர்கள்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் வயது வரை பாதுகாப்பு நம்பிக்கையானவராக ஆண்துணையாக தந்தை,தமையன்மார் திருமணம் முடித்த பின் கணவன் இருப்பார்கள் .ஆனால் இந்த ஆண்உறவுகள் மதுபாவனையால் தமது சுயபுத்தியை இழந்தால் எங்கிருந்து தமக்கான பாதுகாப்பை பெறமுடியும் .

: பாதுகாப்பு என்றால் வாழ்க்கைக்கு தேவையான காரணிகளுக்கு உதவுவது அத்தனையும் சேரும்,

ஆண்களின் மதுபாவனையே பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வருகின்றது .

மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்ககோல் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளியாகவே மாறி விடுகிறார்கள்.

குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதற்கு பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள்.கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல் வலியைப் போக்குவதற்குக் குடிப்பதாகவும், இளம் வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது மகிழ்ச்சியான மனோநிலையில் இருந்தால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகி விடுவதுண்டு.

காதல் தோல்வி, குடும்பத்தில் பிரச்சினை, வேலையின்மை, குடிப்பது ஓர் நாகரிகம், மனஅழுத்தம், கடன் சுமை என்றெல்லாம் பலவித காரணங்கள் கூறுவார்கள்.

ஆனால் இவை எதுவும் உண்மைக் காரணமல்ல. தன்னை நியாயப்படுத்தி, அடுத்தவர் தன்னில் பரிதாபப்படும்படி காரணத்தைக் கூறி, குடிப்பதை நியாயப்படுத்தி, குடியைத் தொடர்வதற்காகக் கூறப்படும் ஒரு காரணங்கள் இவை.

விருந்துகளில் குடித்தல் நாகரிகம் என்று சொல்லிக் குடிக்காதவர்களையும் குடிக்க வைப்பவர்கள் உள்ளனர். பின்னர் அவர்களில் பலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

நண்பர்களின் வற்புறுத்தல், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வம் இதில் என்ன இருக்கின்றது என்கின்ற எண்ணம் போன்றவற்றினால் இப்பழக்கத்திற்கு பலர் ஆளாகி விடுகின்றனர். சிலர் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க சரியான வழி தெரியாமல், அதிலிருந்து தற்காலிகமாக விடுபட, மயக்க நிலையை அடைய வைக்கின்ற இந்த மதுப் பழக்கத்தினை நாடுகின்றனர்.

மனப்பதற்றம், மனஅழுத்தம் உடையவர்கள்,உறக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் கூட மதுப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். வருடக்கணக்கில் சிலர் அளவுக்கு அதிகமாக குடிப்பர்.தமக்கு ஒன்றும் செய்யவில்லை எனத் தவறாக நினைத்து குடிப்பழக்கத்தினைத் தொடர்கின்றனர்.

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தை விட பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.இதுதான் உண்மை.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் ‘மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்’ என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

மதுபானம் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றது. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில் நரம்பு தளர்ந்து, உடல் சோர்ந்து போய்க் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றது மதுபானம். இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலை செய்து கொண்டோரும் உள்ளனர்.

வேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாகத் தொடங்கிய மதுப் பழக்கம் மெல்ல மெல்லப் பழகி அடிமைத்தனமாகி விடுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மது இல்லாமல் இருக்க முடியாது. உடலில் ஏற்படுகின்ற இரசாயன மாற்றத்தினால் மதுபானம் உபயோகிக்கின்ற அளவும் கூடி விடுகிறது. இதனால் எப்பொழுதும் மது உபயோகிப்பது குறித்தே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருப்பர்.மதுவினால் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகிச் சீரழிந்து போனதை நாம் அறிவோம்.எனவே கேடு தரும் மதுப்பழக்கத்தை நாடாமல் இருப்பதே நன்மை தரும்.

Image may contain: 1 person, selfie and close-up