புதினங்களின் சங்கமம்

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிதர்சன் சுருண்டு வீழந்து மரணம்!!

24 வயதான இளைஞர் ஒருவர் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மயக்கமுற்றதை அடுத்து உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு – கோம்பாவில் பகுதியில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு விக்னேஷ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினரான இராசேந்திரம் நிதர்சன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று (02) மாலை கரப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிதர்சன் சோர்வாகவுள்ளதாகத் தெரிவித்து மைதானத்திலிருந்து வௌியேறியுள்ளார்.

இதனையடுத்து அவர் மயக்கமுற்றதால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகள் நடைபெற்றன.