புலம்பெயர் தமிழர்

சவுதி அரேபியாவுக்குச் சென்ற கலைச்செல்விக்கு நடந்த கேவலம் இது!!

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற சந்தனம் ராமலிங்கம்
கலைச்செல்வி தொடர்பாக தகவல் அறிந்தால், அது பற்றி அறிய தருமாறு இலங்கை வெளிநாட்டு
வேலை வாய்ப்பு பணிகம் தெரிவித்துள்ளது.

கலைச்செல்வி கடந்த 2010 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 7 ஆம் திகதி சவுதி அரேபியா
சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் உள்ள வீட்டாருடன் தொடர்பில்
இருந்து வந்துள்ளார்.

தன் பின்னர் கலைச்செல்வி பற்றிய எந்த தகவல்களும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.
இந்த பெண் பற்றி தகவல்களை அறிந்திருந்தால், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின்
111 என்ற அவசர அழைப்பு எண் மற்றும் 0114-374384, 0112- 864112, 0112880500 ஆகிய
தொலைபேசி எண்களுடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை
விடுத்துள்ளது.