யாழில் ஏப்ரல்பூலில் மாணவிகளுக்கு அலங்கோலம்!! அடித்த அதிபருக்கு அச்சுறுத்தல்
இன்று நான் அவதானித்த விடயம் ஒன்று பல கேள்விகளை என் மனதுக்குள் எழுப்பியது..!
அவற்றை உங்களிடமும் பகிர்ந்து எனது நிலைப்பாடையும் பதிவு செய்து உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.
விடயம் இதுவே மானிப்பாயில் ஒரு பிரபல பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று பாடசாலை முடிவுற்று மருதடி பிள்ளையார் சுற்றாடலில் பிற பாடசாலை மாணவ மாணவிகளை குறி வைத்து முட்டாள் தினத்தை முன்னிட்டு மை(Ink) தெளித்து குறும்புத்தனம் செய்துள்ளனர். இறுதியில் கோஸ்ரி மோதலாக மாற்றம் அடைந்துள்ளது.
இதை அவதானித்த ஒருவர் பாடசாலைக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இவர்களின் செயலை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர்களை மீண்டும் அப்பகுதியிலிருந்து பாடசாலைக்கு அழைத்து செம்மையாக ஒரு ஆசிரியரால் பூசை வழங்கப்பட்டுள்ளது.
அடிவாங்கிய மூவரில் ஒரு மாணவனின் பெற்றோர் இன்று காலை கல்லூரிக்கு வந்து அதிபருடன் முறன்படும் போது நானும் ஒரு தேவை கருதி அந்த இடத்தில் சமூகம் அளித்திருந்தேன். மாணவனின் தந்தை அதி உச்ச ஆக்ரோசம் அடைந்து அதிபருடன் கருத்து மோதலில் ஈடுபட்டார்.தந்தையால் முன் வைத்த குற்றச்சாட்டுகள்.
பாடாசாலைக்கு வெளியில் நடந்த சம்பவத்துக்கு நீங்கள் எவ்வாறு தண்டிக்கலாம்?
அதிபர் அளித்த பதில் எமது பாடசாலை சீருடையில் மாணவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர்.
பிரம்பால் காலில் அடித்து ஏற்பட்ட தழும்பை போனில் பதிவேற்றி இவ்வாறு அடிக்க யார் உங்களுக்கு அனுமதியளித்தது. தண்டித்த ஆசிரியரை நான் பார்க்கவேண்டும்.
இவ்வாறு பலத்த சத்தத்தை எழுப்பி தந்தை அல்லோகலபடுத்தினார். அதிபர் நடந்த சம்பவத்துக்கு ஆசிரியர் சார்பாக மன்னிப்பு கோரினார். தவறை இழைத்து விட்டு மன்னிப்பு கோரினால் பிழையை சரி செய்யமுடியுமா என ஆக்ரோசமாக கத்தினார். மகனை தண்டித்த ஆசிரியரை இனம் காட்டுங்கள் அவரை நான் பார்க்கவேணும் என உரத்து கத்தினார்.
அதிபர் அவர்கள்அந்த ஆசிரியர் பாடசாலை விடயமாக வெளியே சென்றுவிட்டார். தந்தை அவரை நான் பார்க்கவேணும் எவ்வளவு நேரமானாலும் பறவாயில்லை காத்திருக்கிறேன் என சொன்னார். அவரின் ஆவேசத்தை குறைப்பதற்கு சக ஆசிரியர்கள் முயற்சிக்க எனது அலுவலை முடிந்து அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன்.
எனது பார்வையிலிருந்து பிள்ளையின் பாசம் தந்தையின் கண்ணை மறைக்கிறது. கருத்து மோதலின் போது என் பிள்ளைக்கு நான் ஒரு முறை கூட அடித்ததில்லை என்று கூறினார். அவர் பிள்ளை இழைத்த தவறை உணர்ந்தவராக காணமுடியவில்லை. அதிபரின் மன்னிப்பை ஏற்க அவரால் முடியவில்லை.
ஆசிரியர் கண்மூடித்தனமாக கண்டித்ததை
ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் அடியாத மாடு படியாது என்ற கொள்கையை கை விட்டதால் தான் கல்வி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
இன்று தெருவில் மை வீசி விளையாடுபவர்கள் கண்டிப்பு இல்லாவிட்டால் நாளை வாள் வீசி விளையாடும் போது தடுப்பது கடிணம்.
குறைந்தளவு கண்டிப்பு இல்லாவிட்டால் பிள்ளைகளை புறச்சூழல் கெடுத்துவிட்டது. என்பதை பெற்றோர் உணரவேண்டும்.
மேலை நாட்டு கலாச்சாரங்களை முழுமையாக ஏற்கமுடியாது. மனித உரிமைகள் பற்றி பேசி இப்போது கண்டிக்காமல் விடும் மாணவர்கள் எதிர்காலதில் சமூகவிரோதிகளாகவே மாற்றம் அடைவர்.
இன்று எம்மிடம் பெரியவர்களை மதிக்கும் பண்பு எமக்கு கற்பித்த ஆசிரியர்களால் ஏற்பட்டது. அன்றைய நாட்களில் தெருவில் ஆசிரியரை கண்ணுற்றால் சயிக்கிளால் இறங்கி அவரை மரியாதை செலுத்தி செல்வோம்.
ஆனால் மனித உரிமை மீறல் என சின்ன விடயங்களை வைத்து பெற்றோரால் ஆசிரியர்கள் அச்சுறுத்துவதை என்னால் ஏற்கமுடியாது.
ஆசிரியரிடம் அடங்கமறுப்பவன் நாளை சட்டத்துக்கு அடங்க மறுப்பான் அதன் பின் சமூகத்துக்கு தீங்கு விளைவித்து கிரிமினல் ஆகி அவன் வாழ்வு சீர்கெடும். மேலே பதிவேற்றிய படம் ஒரு அந்நியமொழி பாடசாலை மாணவர்களால் மாணவியை துஸ்பிரயோகம் செய்யும் நிகழ்வு இவ்வாறானவர்களை புத்திமதி கூறி திருத்தமுடியுமா? ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வையுங்கள்.
நன்றி
Vaishnavi Srirangan
முகப்புத்தகம்
இது ஒரு முகப்புத்தகப் பதிவாகும்.