புதினங்களின் சங்கமம்

இலங்கைக்குள்ளும் கொரோனா வைரஸ்?: இருவர் வைத்தியசாலையில்! பரபரப்பில் வைத்தியர்கள்!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படும் சீன பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உள்ளூர் பெண். பாதிக்கப்பட்ட மற்றையவரான சீனப் பெண், சில நாட்களின் முன்னர்தான் சீனாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர் தொடர்பிலும், சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.