புதினங்களின் சங்கமம்

யாழில் படுகாயங்களுடன் ஆணின் சடலம்!! பொலிசார் தீவிர விசாரணையில் (Photos)

யாழ் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

வீதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனா்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனா்.

குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், கொலையாக இருக்கலாம் என அங்கிருந்தவா்கள் கூறியுள்ளனா்.

எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கொடிகாமம் பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.