புதினங்களின் சங்கமம்

யாழ்,கோண்டாவில் சந்தேகத்திற்கிடமாக நின்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு!!

கோண்டாவில்- அரசடி பிள்ளையார் ஆலய சுற்றாடலில் இரு நாட்களுக்கு மேல் நின்ற சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் சிங்கள காவல்துறையால் மீட்பு.

வட தமிழீழம் , யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன் றின் அருகில் கடந்த சில நாட்களாக உரிமைகோரப்படாமலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சிங்கள காவல்துறை நேற்று மாலை மீட்டுள்ளனர்.

கோண்டாவில் அரசடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் கடந்த இரு நாட்களாக திறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி தொடர்பில் எவரும் எந்த முறைப்பாடும் செய்யவில்லை.

எனத் தெரிவித்த சிங்கள காவல்துறை உந்துருளியை மீட்காமலேயே திரும்பிச் சென்றனர். இருந்தபோதும் இன்று காலை வரை குறித்த உந்துருளியை எவரும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.