வவுனியாவில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
வவுனியா- தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில், வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 35) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

