புதினங்களின் சங்கமம்

அச்சுவேலியில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம்

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கன்ரர் ரக வாகனத்தில் வந்திறங்கிய கும்பல் வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை அடித்துச் சேதப்படுத்தியது. அதனால் வீட்டிலிருந்த மூவரும் அச்சமடைந்து அறை ஒன்றுக்குள் போய் பூட்டிவிட்டு இருந்துள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி வருகின்றனர்.

Image may contain: indoor