பச்சப் பனை மட்டையில உப்புத்தடவி ஒருக்கா கிளிநொச்சி போவம்!! பேய் ஓட்டுவம்
பச்சப் பன மட்டையில உப்பு தடாவி எடுத்துத்து ஒருக்கா கிளிநொச்சி பக்கமா போவணும்…(கிளிநொச்சி இலவச பேய் ஓட்டும் வைபவம்)நாம் இலவச திருமணத்தைதான் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் இலவச பேய் ஓட்டுதல் நிகழ்வு கேள்வி பட்டிருக்கின்றமா???(கிளிநொச்சி)
தற்போது வடகிழக்கில் சைவமக்கள் வாழும் இடங்களில் பழமைவாய்ந்த சூனியம் ,செய்வினை போன்ற மூடநம்பிக்கைகள் மருவி பொதுமக்களை மதத்தின் பெயரால் சில மதுபாவனையாளர் செய்த ஏமாற்றும் பழமையான செயற்பாடுகள் அழிந்து இதுபற்றி எமது மக்கள் அலட்டிகொள்ளாத காலத்தில் இல்லாத ஒரு பிரச்சினையை பூதாகரமாக இருப்பதாக காட்டி அதனை தாம் தீர்ப்பதாக கூறி இதன் மூலம் நன்மையடைவதை நாம் அரசியல்வாதிகளே அறிந்துள்ளோம் .
ஆனால் இதை கிறிஸ்தவ சில சபைகள் பின்பற்றுகின்றது .வடகிழக்கிலுள்ள கிராம புரங்களிலும் கல்வியறிவு குறைந்த சைவ மக்களிடையே அவர்களிடையே காணப்படும் பிரசர் ,சீனி வருத்தம் ,தலையிடி ,அல்சர் போன்ற நோய்களுக்கு சூனியம்தான் காரணம் இதை உருவாக்குவது உங்களை பிடித்துள்ள கெட்ட ஆவி என சூதனமாக மூளைச்சலவை செய்து நோயை சுகமாக்குவதாகவும் சாத்தானை துரத்துவதாக கூறி தமது மதத்தை மக்களிடையே இலகுவாக உள்நுழைப்பது ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றது,
அந்தவகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கிறிஸ்தவத்தின் கானான் எனும் மதம்மாற்றும் சபையினர் பேய் ,சூனியம் விரட்டுவதாக கூறி யுத்தத்தில் கால் ,கை இழந்த மற்றும் விரக்தியில் வாழும் சைவமக்களை பெரும் பொருட்செலவில் கொண்டு சேர்த்து அவர்களை மதம்மாற்றிய சம்பவம் பலருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது .