புதினங்களின் சங்கமம்

கனடாவில் தமிழ்ப் பெண்ணைக் காணவில்லை!! வலை வீசுகின்றனர் பொலிசார்!!

கனடாவின் ரொறென்றோவில் தமிழ்ப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார். அவரை தேடி வருவதாக ரொறென்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சக்தி குமாரசாமி (53) என்ற பெண் கடந்த 15ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

அவர் 15ம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் கருப்பு நிற கோட், கருப்பு நிற பாதணி மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார்.

ஸ்ரீசக்தி குறித்து தகவல் தெரிந்தால் பொலிஸார் அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.