புதினங்களின் சங்கமம்

துபாய் கோடீஸ்வர குடும்பத்திடனம் 200 மில்லியன் கொள்ளையடித்த இலங்கையர்!! பொலிஸ் விலைவீசுகின்றது!!

இலங்கையர் ஒருவருக்கு அனுதாபம் காட்டி டுபாயிலுள்ள தமது வீட்டிற்கு பணியாளராக அழைத்து சென்ற இந்திய கோடீஸ்வர தம்பதியின் வீட்டில் கைவரிசை காட்டிய இலங்கையர் ஒருவரை டுபாய் பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இலங்கை மதிப்பில் 200 மில்லியன் ரூபா திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த இந்திய தம்பதி சில மாதங்களின் முன்னர் இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை சந்தித்துள்ளது. அவரது நிலைமையை பார்த்து இரங்கி, தமது வீட்டில் பணியாளராக இருக்கிறாரா என வினவியுள்ளது. அந்த நபரும் சம்மதிக்க, அவரை டுபாயின் அல் கர்ஹூட்டில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அண்மையில் அந்த தம்பதி ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுலாவிற்கு சென்ற சமயத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது.

தனது தாய்க்கு சுகவீனம் என குறிப்பிட்டு, இடைப்பட்ட நாளில் இலங்கைக்கு அவர் வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இம்மாத ஆரம்பத்தில் தமது வீட்டுக்கு திரும்பிய தம்பதி, லொக்கர் உடைக்கப்பட்டு திருடப்பட்டதை கண்டறிந்தனர்.

நகைகள், 6,500 டொலர் மதிப்பிலான எட்டு மின்னணு கைக்கடிகாரங்கள், 56,716 டொலர் மதிப்புள்ள கிரெடிட் கார்ட் உள்ளிட்ட பொருட்கள் திருட்பட்டதாக டுபாய் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த சந்தேகநபர் தற்போது டுபாய்க்கே திரும்பி சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை கண்டறிய விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதாக டுபாய் பொலிசார் அறிவித்துள்ளனர்.