புதினங்களின் சங்கமம்

யாழ் மட்டுவில் பகுதியில் அதி வேகத்தால் வந்த வினை (Photos)

யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குளிர்பானங்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் காணி ஒன்றுக்குள் தடம்புரண்டுள்ளது.

குறித்த பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.