வெள்ளவத்தையில் மிக ஆபத்தான கடற்சிங்கம்!! பார்க்க குவியும் மக்கள்!! (Photos)
கொழும்பு – வெள்ளவத்தை கடற்பரப்பில் கடற்சிங்கம் ஒன்று கரை வந்துள்ளது கடந்த இரண்டு நாட்களாக குறித்த கடற்சிங்கம் கொள்ளுப்பிட்டி முதல் தெஹிவளை கடற்பரப்பில் தென்பட்டது.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த கடற்சிங்கம் கரைக்கு அடித்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வருகை தந்துள்ளதுடன் குறித்த விலங்கிற்கு இடத்தை அனுமதிக்குமாறு பலமுறை மக்களை அறிவுறுத்தினர்.
இவை உலகின் மிக ஆபத்தான கடல் விலங்குகளில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதனை பார்க்க பெருமளவு மக்கள் அவ்விடத்தில் குவிந்துள்ளனர்.




