நல்லுார் கோவில் முதலாளி சயந்தன் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார்!!
நல்லுார் கோவிலின் தற்போதய முதலாளியான சயந்தன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக சில இந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தகவல்களைக் கசிய விட்டுள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகங்கள் தமக்கு விரும்பியவர்களின் பெயர்களை ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் வெளியிட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இணையத்தளங்கள் மற்றும் சில பத்திரிகைகள் மூலமாக யாழ் மற்றும் கொழும்பை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் சிலர் தமது பெயரையும் ஆளுநராக அடிபடுவதாக செய்தி வெளியிடும்படி ஊடகங்களுக்கு சலுகைகள் கொடுத்து செய்தியை வெளியிடவைக்கின்றனர். இவர்கள் ஆளுநராக மாறுகின்றார்களோ இல்லையோ இவ்வாறான செய்தியை அவர்கள் வைத்து மிகக் கேவலமான சமூகவிரோத செயல்களை செய்ய முற்படலாம். இன்றைய வலம்புரிப்பத்திரிகையும் இந்து பௌத்த அமைப்பைச் சேர்ந்த இராமச்சந்திரன் என்பவனது பெயரையும் ஆளுநராக தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த இராமச்சந்திரன் மிகப் பெரிய சமூகவிரோதியாவான். வேலைவாய்ப்பு என்னும் பெயரில் பல இளைஞர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்துள்ளான். அத்துடன் அதே போல் இளம்பெண்களையும் ஏமாற்றி பாலியல்முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளான். இவ்வாறானவர்கள் தங்களை சமூகமட்டத்தில் பிரபலப்படுத்துவதற்காக ஆளுநர் என்ற பதவியை முக்கியஸ்துவப்படுத்தி ஆளுநராக இல்லாவிட்டாலும் பலரது மதிப்பை பெற முற்படுகின்றனர். இதே போலவே அண்மைக்காலத்தில் ஆளுநர் பதவிக்கான பெயர்களை இணையத்தளங்கள், பத்திரிகைகளில் வெளியிட்ட பலர் சமூகவிரோதிகளாக உள்ளார்கள். இவர்கள் தொடர்பாக மக்கள் விளிப்புணர்வுடன் செயற்படுதல் முக்கியம்.
இதேவேளை நல்லுார் கோவில் முதலாளியையும் ஆளுநராக்கலாமே என சமூகவலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்கள் வந்துகொண்டுள்ளன. நல்லுார் கோவிலில் நேரம் தவறாமை மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஏழைகளும் முருகனுக்கு அர்ச்சனை செய்வதற்காக ஒருரூபாவில் ரிக்கட் விற்கப்படுவதாகவும், அத்துடன் சிறந்த கட்டிடகலை வல்லுனர் எனவும், எளிமையானவர் எனவும் அவர்கள் கூறி வட மாகாண ஆளுநராக அவர் வருவதற்கு தகுதியானவர் எனவும் தகவல்களை வெளியிட்டுவருகின்றனர்.
இதே வேளை வடக்குக்கான ஆளுநர் நியமனம் என்பது பெரும் சிக்கலாக ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு மாறியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

