புதினங்களின் சங்கமம்

யாழ் நகரப்பகுதியில் திரியும் இந்த இளைஞன் யார்?? கொஞ்சம் உற்றுப் பாருங்கள்!!

கொஞ்சம் உற்றுப் பாருங்கள்

தினமும் நீங்கள் நடமாடும் யாழ் பஸ்நிலைய வாயிலில்..

ஆரியகுளம் சத்தியில்..

கந்தர் மடம் சந்தியில்..

பழைய ஓர் கால்சட்டை மட்டும் அது விழுந்து விடாமல் கட்டபட்ட கயிறு..

தன்னை மறந்து உலகை வெறித்தபடி நிற்கும்

ஓர் மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ் மகன் தான் இவன்

கோடி ரூபாய் கொட்டி கோயில் கோபுரங்கள் எழுந்து வரும் காரை நகர் மண்ணில் பிறந்து உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கல்வி கற்றவனாம்..
எத்தனை வெயில் எத்தனை மழை எதனையும் இவன் பொருட்படுத்தவில்லை..

எவரிடமும் வலிந்து சென்று உதவி உணவு கேட்டதில்லை.

போதை அறியான் புகை அறியான் பெண்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டான்

அடுத்தவருக்கு இடையூறு செய்ய மாட்டான்

இவன் மீது அன்பு செலுத்த அக்கறை காட்டவும் குணப்படுத்தவும் இந்த உலகில் எவரும் இல்லை ..?

எத்தனை அதிகாரிகள் எத்தனை தொண்டு நிறுவனங்கள் ..

எத்தனை மனிதர்கள் தினமும் கடந்து போகிறார்கள்..

கருணை உள்ளங்களின் கவனத்திற்கு இது…

Image may contain: 2 people, people standing and outdoorImage may contain: one or more people, people standing, shoes and outdoor