கொழும்பில் தமிழ் குடும்பப் பெண்ணுக்கு ஆபாசமாக நாக்கை நீட்டி காட்டிய பொலிஸ்காரன்!! வீடியோ
கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெரு பொலிசார் ஜிந்துப்பிட்டிப் பகுதியில் தமிழ் குடும்பப் பெண் ஒருவருக்கு சீருடையுடன் நின்று ஆபாசமான முறையில் நாக்கை நீட்டிக் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிந்துப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்தவர்களை வெளியேற்றுவதற்காக நீதிமன்ற ஊழியர்களுடன் சென்ற பொலிசாரில் ஒருவரே இவ்வாறான ஆபாச சைகை காட்டியதாகத் தெரியவருகின்றது. குறித்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் குடும்பப் பெண் பொலிசாரி்டம் கேள்விகள் கேட்க முற்பட்ட போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

