“புலிகளை முற்றாக அழித்த ராஜபக்ஷவினருக்கு வாழ்த்துக்கள்‘ – சுப்பிரமணியம்சுவாமியார் சொல்வது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொழும்பில் சந்திப்பதாக பா.ஜா.க.வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், விடுதலை புலிகளை முற்றாக அழித்த ராஜபக்ஷவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.
இதன்போது பல தலைவர்களை கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

