புதினங்களின் சங்கமம்

கொழும்பில் சுவிஸ்லாந்து துாதுரகப் பெண் பணியாளர் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்!!

நேற்று முன்தினம் இலங்கையிலுள்ள உள்ள சுவிட்சலாந்து தூதரகத்தில் பணியாற்றிய இலங்கைப் பெண் பணியாளர் இனந்தெரியாத வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டு இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலையானார் என்று சுவிட்சலாந்து வெளியுறவுத்துறை EDA அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதோடு பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பெண்; ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளதுடன் எழுத்துமூல பதிலொன்றை வழங்கியுள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தூதரகம் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தூதரக பணியாளரை அச்சுறுத்தினார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.