புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் வீடு புகுந்து இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல்!! இருவர் படுகாயம்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் : இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் ஓயார்சின்னக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்து வீடு ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீ்ட்டின் யன்னல் , கதவு போன்றவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டிலிருந்து இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இவ் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.