யாழ் மாநகரசபையில் திருவிளையாடல் செய்த பெண் அலுவலர்!! யாரும் கவனிக்கவில்லை!!
யாழ்ப்பாண மாநகர சபையின் திட்ட மிடல் கிளையில் பணிபுரிந்த பெண் பணியாளர் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 லட்சம் ரூபா நிதி மோசடி மேற்கொண்ட நிலையில் அதனை அறவிட மாநகர சபை நிர்வாகம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.
மாநகர சபையின் திட்டமிடல் கிளையின் கீழ் புதிய கட்டட அனுமதி மற் றும் பல்வேறு அனுமதிகளுக்காக வழங்கப்படும் படிவங்கள் மற்றும் அறவீடுகளின்போதே குறித்த பண மோசடி இடம்பெற்றமை 2016ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. நிர்வாக ரீதியில் இருப்பு கணக்கிடப்பட்டே பெறுமதி கண்டறியப்பட் டது.
குறித்த மூத்த பெண் அலுவலர் மூத்த அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர் என்று அப்போது கூறப்பட்ட போதும் அதனை மாநகர நிர்வாகம் மறுத்திருந்தது.
இது குறித்து மாநகர சபை யாழ்ப் பாணப் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் அலுவலருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நிர்வாக ரீதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயத்தைப் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனையடுத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாவை அந்தப் பெண் அலுவலர் மீளச் செலுத்தியிருந்தார்.
பணத்தைத் தானே மோசடி செய்ததாகவும் ஒப்புக்கொண்டிருந்தார். இருப்பினும் நிர்வாக ரீதியில் அடுத்த கட்ட விசாரணைகளுக்குக் கொண்டு செல்லப்படாது 28 மாதங்களாக காலம் கடத்தப்படுவதாகச்சுட்டிக்காட்டப்படுகின்றது.