சர்வதேசக் குத்துச்சண்டை போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சர்வதேச குத்துச்சண்டையில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் சாணுஜன் வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
பன்னாட்டு பாடசாலைகளுக்கு இடையிலான சர்வதேச குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 22ம் திகதி முதல் நேற்று வரை சுவீடன் நாட்டில் நடைபெற்றது.
இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து 7 மாணவர்கள் பங்கு பற்றினர். இதில் தமிழ் மொழியைச் சேர்ந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் சானுஜன் அவர்களும் கலந்து கொண்டார்.
இவர் 17- 18 வயதிற்குட்பட்ட 81 கிலோ எடைப் பிரிவில் பங்கு பற்றி இறுதிப் போட்டியில் சுவீடன் நாட்டு வீரருடன் மோதி வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்து கல்லூரியின் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தார்.



