மட்டக்களப்பில் பயங்கரம்!! குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 3 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.சற்று முன்னர், 5 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், மூவர் தவறி குளத்திற்குள் விழுந்து காணாமல் போயுள்ளனர். அவர்கள் சகதியில் புதையுண்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.பொதுமக்கள், இராணுவத்தினர் இணைந்து தேடுதல் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநேற்றுக்கேணிப் பகுதியில் புதிதாகத் தோண்டப்பட்ட குளத்திலேயே இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.
11,14 வயதுகளையுடைய சிறுவர்களே இவ்வாறு குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கினர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காணாமற்போன மூவரையும் தேடி பணியில் ஊரவர்கள் ஈடுபட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றைய இருவரையும் தேடு பணி முன்னெடுக்கப்படுகிறது.

