முல்லைத்தீவில் பாடசாலைக்குள் முதலை நுளைந்த காட்சிகள் (photos)
முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய வகுப்பறைக்குள் நேற்று பெய்த மழை காரணமாக முதலை ஒன்று புகுந்துள்ளது.இன்று காலை மாணவர்கள் பாடசாலைக்கு சென்று பார்கையில் வகுப்பறை கட்டிடம் ஒன்றிற்குள் முதலை இருப்பது தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில், பாடசாலை நிர்வாகம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலையினை மீட்டுக் கொண்டு சென்றுள்ளார்.6.5 அடி நீளம் கொண்ட குறித்த முதலையினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முதலைகள் சரணலாயத்தில் விடுவதற்காக கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



