Home புதினங்களின் சங்கமம் முச்சக்கரவண்டி ஸ்டிக்கர் மூலம் சிக்கிய கொலையாளிகள் – கொள்ளுப்பிட்டியில் இருவர் கைது!

முச்சக்கரவண்டி ஸ்டிக்கர் மூலம் சிக்கிய கொலையாளிகள் – கொள்ளுப்பிட்டியில் இருவர் கைது!

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரைக் கடத்திச் சென்று, அவரிடமிருந்து 4,000 ரூபாய் பணம் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை கொள்ளையிட்டு, பின்னர் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியை அடையாளம் காண்பதில் சிசிடிவி காட்சிகளில் பதிவான சிறியதொரு விபரம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டியின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியாத வகையில் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்த போதிலும், அந்த முச்சக்கரவண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் ஒன்றின் மூலம் அதனை அடையாளம் காண முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்ய முடிந்துள்ளது.

இதேவேளை, குறித்த நபரைக் கொலை செய்த பின்னர் அவரது சடலத்தை வீதியோரத்தில் கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்கள், பின்னர் மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பி வந்து நிலைமையை அவதானிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார், இருவரையும் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments